பொதுமக்கள் திடீர் போராட்டம்

நெல்லையில் பொதுமக்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.

Update: 2022-11-17 20:17 GMT

நெல்லை சந்திப்பு ஸ்ரீபுரத்தில் இருந்து தச்சநல்லூர் செல்லும் சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக இருந்தது. தற்போது அங்கு சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் ஆங்காங்கே தோண்டப்பட்ட குழிகள் நிரப்பப்படாமல் அப்படியே கிடக்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள குழிகளை மூடி சாலையை உடனே சீரமைக்க வலியுறுத்தி அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நேற்று ஸ்ரீபுரத்தில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையில், சாலை பணிகளை விரைந்து முடிப்பதாக கூறினார்கள். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்