பத்தமடை பாயில் 100 யோகாசன ஓவியங்கள் வரைந்த மாணவி

பத்தமடை பாயில் 100 யோகாசன ஓவியங்கள் வரைந்து மாணவி அசத்தினார்.

Update: 2023-06-18 19:00 GMT

நெல்லை சிவராம் கலைக்கூட மாணவியும், கணேசன்- அனுராதா தம்பதி மகளுமான ஜெயந்தி 7 ஆண்டுகளாக ஓவியப்பயிற்சி பெற்று வருகிறார். இவர் உலக யோகா தினத்தையொட்டி, புகழ்பெற்ற பத்தமடை பாயில் 100 வகையான யோகாசனங்களை 3 மாதங்களாக வரைந்து சாதனை படைத்துள்ளார். இதில் பத்மாசனம், சிரசாசனம், நவாசனம், சக்ராசனம், அர்த்தசக்ராசனம், கோமுகாசனம் உள்ளிட்ட 100 வகையான யோகாசன ஓவியங்களை தத்ரூபமாக வரைந்துள்ளார். அவற்றை பாளையங்கோட்டை மேற்கு கோட்டைவாசல் கலையரங்க வளாகத்தில் காட்சிப்படுத்தினார். அவற்றை ஏராளமானவர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். மாணவி ஜெயந்திக்கு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி பரிசு வழங்கினார். ஓவிய ஆசிரியர் சிவராமகிருஷ்ணன், யோகா பயிற்சியாளர் யூசப் அலி, ஓவிய ஆசிரியர்கள் திருவானந்தம், ஜமால், கணேசன், நல்லாசிரியர் கணபதி சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சிவராம் கலைக்கூட ஆசிரியர் மகாராஜன் மற்றும் மாணவியின் பெற்றோர் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்