வேளுக்குடி சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டது
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக வேளுக்குடி சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டது.
கூத்தாநல்லூர்:
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக வேளுக்குடி சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டது.
ஆபத்தான வளைவு
கூத்தாநல்லூர் அருகே உள்ள, வேளுக்குடி சாலையில், மிகவும் ஆபத்தான வளைவு உள்ளது. இந்த சாலை திருவாரூர், மன்னார்குடி வழித்தடம் என்பதால், இந்த சாலையில் திருவாரூர், மன்னார்குடி, நாகப்பட்டினம், நாகூர், மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி, கும்பகோணம், திருச்சி, தஞ்சாவூர், காரைக்கால் மற்றும் ஏனைய ஊர்களுக்கு சென்று வரக்கூடிய அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி-கல்லூரி வாகனங்கள், கனரக வாகனங்கள், கார், வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இதர வாகனங்களும் இந்த சாலையில் தினமும் சென்று வருகின்றன.
விபத்துகள்
இந்த நிலையில், வேளுக்குடி சாலையில் உள்ள ஆபத்தான வளைவில், எதிர் எதிரே வரும் வாகனங்கள் எளிதில் தெரிவதில்லை. இதனால், அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகின்றன.மேலும், ஆபத்தான வளைவில் வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்துகள் ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாக உள்ளது.இதனால், ஆபத்தான வளைவில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.
வேகத்தடை
இதுகுறித்து செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் வெளியானது. அதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, வேளுக்குடி சாலையில் வேகத்தடை அமைத்தனர்.
இதை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட'தினத்தந்தி' நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்தனர்.