உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம்
செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம் நடந்தது.
செங்கோட்டை:
செங்கோட்டை கீழத்தெரு வீரகேரள விநாயகா் கோவிலில் தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் சார்பில் உலக நன்மை வேண்டி பரிகார யாகம் மற்றும் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பின் தென்காசி மாவட்ட செயலாளா் ராமநாத் தலைமை தாங்கினார். திருவாசக கமிட்டி கவுரவ தலைவா் இசக்கி, செயலாளா் முத்துசிவா ஆகியோர் முன்னிலை வகித்தனா். செயற்குழு உறுப்பினா் குருசாமி வரவேற்றார். நிகழ்ச்சியில் காலை 3 மணிக்கு இலஞ்சி சிவசுப்பிரமணியன் தலைமையில் உலக நன்மை வேண்டி கணபதி ஹோமம், பரிகார ஹோமம் உள்பட பல்வேறு ஹோமங்கள் நடத்தப்பட்டது. பின்னா் வீரகேரளவிநாயகா், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடத்தப்பட்டது. காலை 10 மணிக்கு சிவா பஞ்சவாத்திய குழுவினரின் பஞ்சவாத்திய ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலை வந்தடைந்தது. பின்னர் திருவாசகி சிவபகவதி தலைமையிலான குழுவினரின் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் விழா கமிட்டி நிர்வாகிகள் ஆடிட்டர் சங்கரநாராயணன், பிரபு, மாரியப்பன் மற்றும் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.