பந்தலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
பந்தலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
பந்தலூர்
பந்தலூர் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் அரசு அறிவித்த மாற்றுத் திறனாளிகளுக்கனான ரூ.1000 உதவித்தொகையை, ரூ.1,500 ரூபாயாக உயர்த்தியதற்காக பெயர் பதிவு நடைபெற்றது. முகாமிற்கு நலிந்தோர் நலத்திட்ட தாசில்தார் லதா தலைமை தாங்கினார். முதுநிலை வருவாய் ஆய்வாளர் காமு, வருவாய் ஆய்வாளர் லட்சுமி சங்கர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கர்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதிய முறையாக வழங்குவது குறித்து விவாவதிக்கப்பட்டதுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.