பேரையூர்,
பேரையூர் தாலுகா சின்னவண்டாரியில் உள்ள ஒரு வீட்டில் பாம்பு புகுந்தது. இது குறித்த தகவல் டி.கல்லுப்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சீனிவாசன் (பொறுப்பு) தலைமையில் தீயணைப்பு துறையினர் சின்னவண்டாரி கிராமத்துக்கு சென்று பாம்பு பதுங்கி இருந்த வீட்டில் அரை மணி நேரம் போராடி 5 அடி நீளமுள்ள பாம்பை பிடித்தனர். பிடிபட்ட பாம்பை சாப்டூர் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அந்த பாம்பை வனப்பகுதியில் விட்டனர்.