விஷமங்கலம் கிராமத்தில் வேகத்தடை அமைக்காத நெடுஞ்சாலை துறையினரை கண்டித்து சாலை மறியல

விஷமங்கலம் கிராமத்தில் வேகத்தடை அமைக்காத நெடுஞ்சாலை துறையினரை‌ கண்டித்து சாலை மறியல நடந்தது.

Update: 2023-04-29 18:16 GMT

விஷமங்கலம் கிராமத்தில் வேகத்தடை அமைக்காத நெடுஞ்சாலை துறையினரை கண்டித்து சாலை மறியல நடந்தது.

திருப்பத்தூர்- திருவண்ணாமலை மெயின் ரோட்டில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தார் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. திருப்பத்தூர் அருகே விஷமங்கலம் கிராம மெயின் ரோட்டில் அரசு பள்ளி, கிராம நிர்வாக அலுவலகம், பெட்ரோல் பங்க் உள்ளதால் வேகத்தடை அமைக்க வேண்டும் என கூறி நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் தெரிவித்தனர்.

அதனை ஏற்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் 200-க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் திருவண்ணாமலை மெயின் ரோட்டில் விஷமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த தாலுகா போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி திங்கட்கிழமை வேகத்தடை அமைத்து தருவதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் திருப்பத்தூர்-திருவண்ணாமலை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்