கிணற்றுக்கு தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்

கிணற்றுக்கு தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-08-21 18:41 GMT


ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த அகரம் செல்லும் சாலையில் சங்கராச்சாரியார் முதியோர் இல்லம் அருகே சாலை ஓரத்தில் கிணறு ஒன்று உள்ளது. சாலை ஓரத்தில் தடுப்புச்சுவர் இல்லாமல் இருப்பதால், இந்த வழியாக செல்ேவார் கிணற்றில் தவறி விழும் அபாயம் உள்ளது. அந்தக் கிணற்றில் அதிகமாக தண்ணீர் உள்ளது. பெரிய ஆபத்து நடக்கும் முன் கிணறு ஓரம் தடுப்புச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்