ஆ.ராசா எம்.பி. மீது பா.ஜ.க.வினர் புகார்
தேனி மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆ.ராசா மீது பா.ஜ.க.வினர் புகார் கொடுத்தனர்
தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு பா.ஜ.க. இளைஞரணி மாவட்ட தலைவர் அஜித் இளங்கோ தலைமையில், நகர தலைவர் மதிவாணன், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் வந்தனர். போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் அவர்கள் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில், தனித் தமிழ்நாடு குறித்து தி.மு.க. எம்.பி. ஆ.ராசா கூறிய கருத்துகள் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.