செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்ட இடத்துக்கு பெயர் சூட்டும் நிகழ்ச்சி

சீர்காழி சட்டை நாதர் கோவிலில் செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்ட இடத்துக்கு பெயர் சூட்டும் நிகழ்ச்சி

Update: 2023-04-28 18:45 GMT

சீர்காழி:

சீர்காழி சட்டை நாதர் கோவிலில் கடந்த 16-ந் தேதி குடமுழுக்கு பணிகளுக்கு யாகசாலை அமைக்க மேல கோபுர வாசல் குபேர மூலையில் பொக்லின் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது 22 ஐம்பொன் சிலைகள் 462 தேவார செப்பேடுகள் மற்றும் பூஜை பொருட்கள் கிடைக்கப்பெற்றது. அதையடுத்து இந்த சிலைகள், செப்பேடுகள் அனைத்தும் சீர்காழி சட்டைநாதர் கோவிலிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள், செப்பேடுகள் கிடைத்த பகுதிக்கு 'திருமுறை ஈன்ற தெய்வத்தமிழ் மண்' என தருமபுரம் ஆதீனம் பெயர் சூட்டினார். தொடர்ந்து அந்த பகுதியில் பெயர் பலகை, கிடைக்கப்பெற்ற செப்பேடுகளில் பதியப்பட்டுள்ள திருமுறைகள் பேனராக அச்சடிக்கப்பட்டு மாலை அணிவித்து பூஜைகள் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது தமிழ்ச்சங்க தலைவர் மார்கோனி, இந்து முன்னணி மாவட்ட தலைவர் சரண்ராஜ், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் பந்தல் முத்து, தமிழ் சங்க செயலாளர் கோவி நடராஜன், பாலசுப்பிரமணியன், கோவில் நிர்வாகி செந்தில் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். தொடர்ந்து குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் திருப்பணிகளை தருமபுரம் ஆதீனம் நேரில் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க கேட்டுக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்