மின்கம்பத்தில் மோட்டாா் சைக்கிள் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

ஆரல்வாய்மொழி அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-08-02 18:45 GMT

நாகர்கோவில்:

ஆரல்வாய்மொழி அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

தனியார் நிறுவன ஊழியர்

ஆரல்வாய்மொழியை அடுத்த கண்ணன்புதூர் பட்டர்குளத்தை சேர்ந்தவர் மோரிசன் (வயது 27). நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் தினமும் வேலைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து செல்வது வழக்கம்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். கண்ணன்புதூர்- பட்டர்குளம் திருப்பத்தில் திரும்பியபோது மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் நின்ற மின்கம்பம் மீது மோதியது. இதில் மோரிசன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

பரிதாப சாவு

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் மோரிசன் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்