திருவாரூரில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த பயிற்சி டாக்டர் உயிரிழப்பு.!

திருவாரூரில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த கேரளாவை சேர்ந்த பயிற்சி டாக்டர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2023-09-15 02:23 GMT

திருவாரூர்,

கேரளாவை சேர்ந்த சிந்து என்ற மாணவி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் படித்து அங்கேயே பயிற்சி டாக்டராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், திடீரென காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிந்து, அதே மருத்துவமனையில் நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பயிற்சி டாக்டர் திடீரென உயிரிழந்ததற்கான காரணம் குறித்து அங்குள்ள டாக்டர்கள் கூறும்போது, "பயிற்சி டாக்டர் சிந்து காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது எந்த வகையான காய்ச்சல் என்பது பற்றி அறிவதற்காக அவருக்கு டெங்கு உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அனைத்தும் எதிர்மறையாக இருந்தது.

பயிற்சி டாக்டர் சிந்துவுக்கு 5 நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. அவருக்கு வந்திருந்தது டைபாய்டு வகை காய்ச்சலாக இருக்கும். அவர் உயிரிழப்புக்கான காரணம் என்ன என்பது பற்றி அறிய அவரது ரத்த மாதிரிகள் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்