கூத்தாநல்லூர் அருகே குளம் தூர்வாரப்பட்டது

கூத்தாநல்லூர் அருகே குளம் தூர்வாரப்பட்டது

Update: 2023-04-30 18:45 GMT

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக கூத்தாநல்லூர் அருகே குளம் தூர்வாரப்பட்டது.

வண்ணாங்குளம்

கூத்தாநல்லூர் அருகே உள்ள நாகங்குடியில் வண்ணாங்குளம் உள்ளது. இந்த குளத்தினை நாகங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் குளிப்பதற்கும், ஆடைகள் துவைப்பதற்கும் பயன்படுத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக அதிகளவில் குப்பைகள் மற்றும் குளம் முழுவதும் தாமரை செடிகள் சூழ்ந்து குளம் இருக்கும் இடம் தெரியாத அளவிற்கு சேதமடைந்து காணப்பட்டது. மேலும் குளத்தை சுற்றிலும் ஆக்கிரமிப்புகளும் இருந்து வந்தன.

குளத்தின் கரையோரத்தில் அமைக்கப்பட்ட சுற்றுச்சுவர் மற்றும் படித்துறைகள் இடிந்து விழுந்து விட்டன. இதனால் குளத்தை அந்த பகுதி மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

குளம் தூர்வாரப்பட்டது

இதனால் நாளடைவில் குளம் மெல்ல மெல்ல ஆழம் குறைந்து மேடான பகுதி போல காட்சியளித்தது. அதனால் குளத்தை சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தை தூர்வாரி தர வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து 'தினத்தந்தி'யில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குளத்தை தூர்வாரி தந்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்