ரவுடியை ஜாமீனில் விடுவிக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

ரவுடியை ஜாமீனில் விடுவிக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது.

Update: 2022-09-19 21:45 GMT

கடலூர்,

கடலூர் மாவட்டம் சமுட்டிக்குப்பத்தைச் சேர்ந்தவர் சீனுவாசன் மகன் ஸ்ரீகாந்த் (வயது 40). ரவுடியான இவரை குள்ளஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தார். பின்னர் அவரை சிறையில் அடைக்காமல் ஜாமீனில் விடுவதற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். ஆனால் லஞ்ச பணம் கொடுக்க விரும்பாத அவர் இதுபற்றி அவர் கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறிய அறிவுரைப்படி ஸ்ரீகாந்த் ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு நேற்று இரவு போலீஸ் நிலையம் அருகே போலீஸ் குடியிருப்பில் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தரை சந்தித்து ரூ.5 ஆயிரம் லஞ்ச பணத்தை கொடுத்தார். பணத்தை வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தரை கையும், களமாக பிடித்து கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்