மொட்டைமாடி சுவரில் அமர்ந்து செல்போன் பேசிய பிளஸ்-2 மாணவி தவறி விழுந்து சாவு

மதுரவாயலில் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த பிளஸ்-2 மாணவி பரிதாபமாக இறந்தார்.;

Update:2023-06-09 14:56 IST

சென்னை வளசரவாக்கம், எஸ்.வி.எஸ். நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் சவுமியா (வயது 17), 12-ம் வகுப்பு படித்து முடித்து விட்டு கல்லூரியில் சேர்வதற்கு முயற்சி செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு மதுரவாயல், அலங்கார் நகர் பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு சென்றார். சவுமியாவின் சகோதரி கர்ப்பிணியாக இருந்ததால் இருவரும் சேர்ந்து வீட்டின் மாடியில் நடைபயிற்சி செய்ய மொட்டை மாடிக்கு சென்றனர். சவுமியா மாடியில் உள்ள சுவற்றின் மீது அமர்ந்து கொண்டுசெல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அவர் எதிர்பாராத விதமாக திடீரென மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சவுமியா பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சவுமியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்