புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தவர் கைது

புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-19 21:14 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் உசிலங்குளம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சாரதியை (வயது 23) பிடித்து கணேஷ்நகர் போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சாரதியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்