ெசட்டி ஊரணியை தூர்வாரி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்

அரிமளம் அருகே செட்டி ஊரணியை தூர்வாரி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.

Update: 2023-09-02 18:33 GMT

செட்டி ஊரணி

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே காரமங்களம் ஊராட்சி தேனிப்பட்டி கிராமத்தில் செட்டி ஊரணி உள்ளது. இந்த செட்டி ஊரணி இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் குளிக்கும் ஊரணியாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த செட்டி ஊரணி தற்போது பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. ஏனெனில் இந்த செட்டி ஊரணியை சுற்றி சுற்றுச்சுவர் இல்லாததால் செட்டி ஊரணியை சுற்றி உள்ள கழிவுநீர் தண்ணீரில் கலக்கின்றன.

மேலும் அவ்வப்போது நாய்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் செத்து மிதக்கின்றன. மேலும் குளத்தில் உள்ள தண்ணீரில் பாசிகள் அதிக அளவு படர்ந்து காணப்படுகின்றது. இதனால் ஊரணியில் உள்ள தண்ணீரை கடந்த சில மாதங்களாக பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

தூர்வார வேண்டும்

இந்த தண்ணீரில் குளித்தால் அரிப்பு உள்ளிட்ட தோல் நோய்கள் ஏற்படுகின்றது. அதனால் 200 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வந்த இந்த ஊரணி தற்போது பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இப்பகுதியை சேர்ந்த கிராமமக்கள் அமைச்சர், கலெக்டர், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

இந்த ஊரணியில் எதிரே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும் உள்ளது. மேலும் மாணவர்கள் தவறி குளத்தில் இறங்கினால் மிகப்பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த ஊரணியை ஆழப்படுத்தி தூர்வார வேண்டும். மேலும் சுற்றுச்சுவர் அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்