சமையல் செய்தபோது சேலையில் தீப்பிடித்தது; மூதாட்டி உடல் கருகி சாவு

தேனி அருகே சமையல் செய்தபோது சேலையில் தீப்பிடித்ததில் மூதாட்டி உடல் கருகி இறந்தார்.

Update: 2023-05-28 21:00 GMT

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டி தெற்கு ஜெகநாதபுரத்தை சேர்ந்த ஆங்கன் மனைவி பேச்சியம்மாள் (வயது 77). இவருடைய கணவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். பேச்சியம்மாள் தனது மகள் வீட்டின் மாடியில் தனியாக சமையல் செய்து வாழ்ந்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர் தனது வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவருடைய சேலையில் தீப்பற்றியது.

அந்த தீ வேகமாக அவரது உடலில் பரவியது. இதனால் அவர் அலறினார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். பின்னர் பேச்சியம்மாளை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்