மேலப்பட்டி சாலையில் படம் எடுத்து ஆடிய நல்ல பாம்பு
மேலப்பட்டி சாலையில் படம் எடுத்து நல்ல பாம்பு ஆடியது.
அன்னவாசல்:
இலுப்பூர் மேலப்பட்டி புறவழிச்சாலையில் உள்ள நல்லாண்டவர் கோவில் அருகே சாலையில் நல்ல பாம்பு ஒன்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக படம் எடுத்து ஆடியது. இதனைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள், வாகன ஓட்டிகள் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர். பின்னர் அவ்வழியாக சென்ற வாகனங்களில் பாம்பு அடிபடாமல் இருக்க அங்கிருந்த சிலர் அந்த பாம்பை காட்டுப்பகுதிக்குள் விரட்டி விட்டனர். இதனால் புறவழிச்சாலையில் ஒருமணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.