ரூ.20 லட்சத்தில் புதிய பல்நோக்கு கட்டிடம்

பண்டாரகுளத்தில் ரூ.20 லட்சத்தில் புதிய பல்நோக்கு கட்டிடத்துக்கு மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்

Update: 2023-01-26 18:45 GMT

கடையம்:

கடையம் ஒன்றியம் வெங்கடாம்பட்டி பஞ்சாயத்து பண்டாரகுளத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூபாய் 20 லட்சம் மதிப்பில் புதிய பல்நோக்கு கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வெங்கடாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் சாருகலா ரவி முன்னிலை வகித்தார்.

ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ் பாண்டியன் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வி.கே.கணபதி, அமைப்புச்செயலாளர் சௌ.ராதா, தொழிற்சங்க மாநில செயலாளர் சேர்மத்துரை, ஒன்றிய செயலாளர் ராஜவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்