போக்குவரத்து போலீஸ்காரர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது

கள்ளக்குறிச்சியில் வாகன சோதனையின்போது போக்குவரத்து போலீஸ்காரர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது கை முறிந்ததால் ஆஸ்பத்திரியில் அனுமதி

Update: 2022-08-24 17:35 GMT

கள்ளக்குறிச்சி

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் வாகன சோதனை நடத்தி வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி, சாலை பாதுகாப்பு விதிகளை மீறுவோருக்கு அபாரதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கள்ளக்குறிச்சி-கச்சிராயப்பாளையம் சாலையில் தீயணைப்பு நிலையம் அருகே கள்ளக்குறிச்சி போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கள்ளக்குறிச்சி நோக்கி வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை போக்குவரத்து போலீஸ்காரர் பழனியாப்பிள்ளை வழிமறித்தார். ஆனால் வேகமாக வந்ததால் கட்டு்ப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் பழனியாப்பிள்ளை மீது பயங்கரமாக மோதியது. இதில் அவரது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு வலியால் அலறி துடித்தார். உடனே அங்கு நின்ற சகபோலீஸ்கரர்களும் மற்றும் பொதுமக்களும் பழனியாப்பிள்ளையை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறர்கள். இதற்கிடையே விபத்து பற்றிய தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் ஆஸ்பத்திரிக்கு சென்று பழனியாபிள்ளை சந்தித்து ஆறுதல் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்