கிணற்றில் தவறி விழுந்து கட்டிட மேஸ்திரி பலி

குடியாத்தம் அருகே கிணற்றில் தவறி விழுந்து கட்டிட மேஸ்திரி பலியானார்.

Update: 2022-07-05 12:35 GMT

குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமன். இவரது மகன் சந்தோஷ்குமார் என்கிற அப்பாய்யன் (வயது 33), கட்டட மேஸ்திரி. இவர் தனது விவசாய கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக உறவினர்கள் குடியாத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த குடியாத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் லோகநாதன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் இறங்கி தேடினர்.

சிறிது நேரத்திற்கு பின் சந்தோஷ் குமார் பிணமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக சந்தோஷ் குமார் உடல் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் சிலம்பரசன், சக்கரவர்த்தி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்