கியாஸ் சிலிண்டரை தலையில் போட்டு பெண்ணை கொலை செய்ய முயன்ற கணவர் கைது
தேனியில் கியாஸ் சிலிண்டரை தலையில் போட்டு பெண்ணை கொலை செய்ய முயன்ற கணவர் கைது செய்யப்பட்டார்.
தேனி அன்னஞ்சி, முனுசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 32). சுமைதூக்கும் தொழிலாளி. இவரது மனைவி மதுபாலா (26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக வெங்கடேசன் வேலைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனை மதுபாலா கண்டித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன் சம்பவத்தன்று வீட்டில் இருந்து காலி கியாஸ் சிலிண்டரை மனைவியின் தலை மீது போட்டார். இதில் படுகாயம் அடைந்த மதுபாலா சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் தேனி அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிந்து வெங்கடேசனை கைது செய்தனர்.