பாப்பிரெட்டிப்பட்டி:-
ஆந்திராவில் இருந்து பஞ்சு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி திருப்பூர் நோக்கி சென்றது. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே காளிப்பேட்டை பகுதியில் வேகத்தடையில் லாரி ஏறி இறங்கிய போது அந்த வழியாக உயரே சென்ற மின்கம்பியில் லாரி உரசியது. இதில் லாரி தீப்பிடித்தது. உடனே டிரைவர் முருகன் லாரியை நிறுத்தினார். தகவல் அறிந்ததும் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர்.