திரளான பக்தர்கள் தரிசனம்

கும்பகோணம், பட்டுக்கோட்டை பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-09-18 19:55 GMT

கும்பகோணம், பட்டுக்கோட்டை பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு அலங்காரம்

திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகர் சன்னதியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகருக்கு சிறப்பு அலங்காரத்துடன் நேற்று காலை முதல் இரவு வரை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மடத்திக்காடு கிராமத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவில், செருவாவிடுதி கடைவீதியில் உள்ள சிவசித்தி விநாயகர் கோவில், நாடங்காடு கிராமத்தில் உள்ள மகா கணபதி கோவில், உப்பு விடுதி கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் ஆகியவற்றிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பொது இடங்களில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அதிராம்பட்டினம்

விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிராம்பட்டினத்தில் உள்ள விநாயகர் கோவில்களிலும் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது மன்னப்பன் குளம் பகுதியில் உள்ள வரம் தரும் விநாயகர் கோவிலில் விநாயகருக்கு கொழுக்கட்டை, சுண்டல், பாயாசம், பழம், அவில், கரும்பு உள்ளிட்டவை படையலிட்டு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

கும்பகோணம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நேற்று கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோவிலில் உச்சிப்பிள்ளையார் சிறப்பு அலங்காரத்தில், மூஷிக வாகனத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக புறப்பட்டு காவிரியாற்றின் பகவத்படித்துறைக்கு வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் அங்கு விநாயகர் மற்றும் அஸ்திர தேவருக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, அஸ்திர தேவரை சுமந்தபடி காவிரியாற்றில் இறங்கி விநாயகர் சதுர்த்தி தீர்த்தவாரி நடைபெற்றது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டு மீண்டும் அஸ்திரதேவருடன் உற்சவ விநாயகப்பெருமான் முக்கிய வீதிகள் வழியாக உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அதேபோல் கும்பகோணம் பகுதியில் உள்ள பகவத் விநாயகர் கோவில், கரும்பாயிரம் விநாயகர் கோவில், மும்மூர்த்தி விநாயகர் கோவில், ஜெகன்நாதபிள்ளையார் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கும்பகோணம் தாராசுரம் திருக்குளம் மேலத்தெருவில் அமைந்துள்ள குபேர விநாயகர் கோவிலில் சதுர்த்தியையொட்டி குபேர விநாயகருக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பின்னர் விநாயகருக்கு 51 கிலோ கொழுக்கட்டை படையலிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பட்டுக்கோட்டை

பட்டுக்கோட்டை நகரில் உள்ள பஸ் நிலையம் சுந்தர விநாயகர் கோவில், பிள்ளையார் கோவில் தெரு விநாயகர் கோவில், சித்தி விநாயகர் கோவில், அரச மரத்தடி பிள்ளையார் கோவில், வீரகணபதி கோவில் அங்காளம்மன்

கோவில் தெரு அம்மணி விநாயகர் கோவில் மற்றும் சிவன் கோவிலில் உள்ள பிள்ளையார் கோவில்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்