காஞ்சிபுரம் அருகே வயல்வெளியில் தரையிறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு

இயந்திரக்கோளாறால் விமானப்படை ஹெலிகாப்டர் வயல்வெளியில் திடீரென தரையிறக்கபட்டது.

Update: 2024-09-09 12:07 GMT

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் அருகே பொறுப்பந்தல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இன்று திடீரென விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று அவசரமாக வயல்வெளியில் தரை இறங்கியது.

இதனை அடுத்து அப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் குவிந்தனர். இந்தநிலையில் வயல்வெளியில் தரையிறங்கிய விமானப்படை ஹெலிகாப்டர் , ராணுவ வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர் என தெரியவந்தது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென விவசாய நிலத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதாக கூறப்பட்டது. சிறிது நேரம் கழித்து தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் புறப்பட்டு சென்றது. வயல்வெளியில் விமானப்படை ஹெலிகாப்டர் திடீரென தரையிறக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏற்கனவே கடந்த மாதம் சாலவாக்கம் பகுதியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்கியது. சுமார் 3 மணி நேரம் கழித்து தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்