விருத்தாசலத்தில்டீசல் இல்லாமல் நடுரோட்டில் நின்ற அரசு பஸ்போக்குவரத்து பாதிப்பு

விருத்தாசலத்தில் டீசல் இல்லாமல் நடுரோட்டில் நின்ற அரசு பஸ்சால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-22 19:59 GMT


விருத்தாசலம், 

கடலூரில் இருந்து திருச்சிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இதில் விருத்தாசலம் பணிமனை 1-ல் இருந்து இயக்கப்படும் பஸ் நேற்று கடலூரில் இருந்து விருத்தாசலம் வரை மட்டும் இயக்கப்பட்டது. இதில், இரவு 8:15 மணியளவில் விருத்தாசலம் பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு, அங்கிருந்து பணிமனை நோக்கி பஸ்சை டிரைவர் ஓட்டினார். அப்போது பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்த பஸ் டீசல் இல்லாமல், உளுந்தூர்பேட்டை சாலையின் நடுவில் நின்றது.

போக்குவரத்து பாதிப்பு

இதன் பின்னர், பணிமனை ஊரியர்கள் ஒரு கேனில் டீசல் எடுத்து வந்து, டேங்கில் ஊற்றினா். அதை தொடர்ந்து டிரைவர் பஸ்சை அங்கிருந்து ஓட்டி சென்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அதோடு அரசு பஸ் டீசல் இருப்பு பற்றி அறியாமல் டிரைவர் பஸ்சை எவ்வாறு ஓட்டி வராலாம்? நகரப்பகுதியில் நின்றதால் பெரும் பிரச்சினை இல்லை. அதுவே எங்காவது காட்டுப்பகுதியில் நடுரோட்டில் பஸ் நின்றிருந்தால் பயணிகள் நிலை என்ன ஆவது என்று, பொதுமக்கள் அதிருப்தியை தெரிவித்தனா்.

Tags:    

மேலும் செய்திகள்