பஸ்சில் சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி மாயம்

பஸ்சில் சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி மாயம் ஆனது.

Update: 2023-01-20 21:46 GMT

பாளையங்கோட்டை:

பாளையங்கோட்டை பெருமாள்புரம் மீட்பர்நகர் ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் பாலசங்கர். இவருடைய மனைவி உஷா (வயது 56). இவர் சம்பவத்தன்று பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் இருந்து பஸ்சில் ஏறி புதிய பஸ்நிலையம் வந்தார். பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பினார். அப்போது தனது கழுத்தில் இருந்த 4½ பவுன் தங்க சங்கிலி மாயமாகி இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்