கேலி, கிண்டல் செய்ததால் விஷம் குடித்த சிறுமி; 2 பேர் கைது

வேப்பந்தட்டை அருகே கேலி, கிண்டல் செய்ததால் சிறுமி விஷம் குடித்தார். இதையடுத்து, 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-30 19:28 GMT

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கை.களத்தூரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 53). இவரது உறவினர் மாரிமுத்து (30). இருவரும் அதே பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியை கேலி, கிண்டல் செய்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அந்த சிறுமி கடந்த 25-ந் தேதி பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவரது உறவினர்கள் சிறுமியை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கேலி, கிண்டல் செய்து மிரட்டல் விடுத்த ராமசாமி, மாரிமுத்து ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்