கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு பரிசு

சிறந்த கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு கலெக்டர் ஜெயசீலன் பரிசு வழங்கினார்.

Update: 2023-10-17 20:03 GMT

விருதுநகர் அருகே குல்லூர்சந்தை கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமினை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்து கால்நடைகளுக்கு நோய் தடுப்பு மருந்தினை வழங்கினார்.முகாமில் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம் செய்தல், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை ஆய்வு, கருப்பை மருத்துவ சிகிச்சைகள் போன்ற நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சிறந்த கால்நடை வளர்ப்பு முறைகளை பின்பற்றிய சிறந்த விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு விருதுகளையும், கிடேறிக்கன்று பேரணி நடத்தப்பட்டு சிறந்த கன்று உரிமையாளர்களுக்கு பரிசுகளையும் கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.அதேபோல விவசாயிகளுக்கு கால்நடை தீவனப்பயிர்களையும், கால்நடை வளர்ப்போருக்கு தாது உப்பு கலவையினையும் கலெக்டர் வழங்கினார். முகாமில் மண்டல கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் டாக்டர் கோயில் ராஜா, கால்நடை மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்