கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மீனவர்

ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததை ரத்து செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மீனவர்

Update: 2023-02-20 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பழையார் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் செண்பகசாமி. இவர் நேற்று மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டத்திற்கு வந்து தன்னை குடும்பத்தோடு ஊரைவிட்டு ஒதுக்கிவைத்துள்ளதாகவும் இதனால் தனது குடும்பத்தினர் யாரும் வீட்டில் இல்லை என்றும், ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததை ரத்து செய்து தனது குடும்பத்தினரை கண்டுபிடித்துத்தர வேண்டும் என கூறி தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி கொண்டு தீவைக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பறித்தனர். இதை தொடர்ந்து செண்பகசாமி, கலெக்டர் மகாபாரதியிடம் மனுவை வழங்கினார். மனுவை பெற்று கொண்ட கலெக்டர், உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் விசாரணைக்காக செண்பகசாமியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்