தனியார் கியாஸ் நிறுவன அலுவலகத்தில் தீ விபத்து

திருச்செந்தூரிலுள்ள தனியார் கியாஸ் நிறுவன அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2022-08-19 14:53 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் புளியடியம்மன் கோவில் தெருவில் தனியார் கியாஸ் நிறுவன பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. நேற்று அதிகாலையில் அந்த அலுவலகத்தில் இருந்து புகை வெளியானதை பார்த்த அக்கம் பக்கத்தினர் திருச்செந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து திருச்செந்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து அந்த அலுவலக கதவை உடைத்து உள்ளே சென்று தீயை அணைத்தனர். நீண்ட நேரமாக தீ பற்றி எரிந்ததால் அலுவலகத்தில் இருந்த 3 கம்ப்யூட்டர்கள், ஏ.சி., பணம் எண்ணும் எந்திரம், மர சாமான்கள், அலங்கார பொருட்கள், முக்கிய ஆவணங்கள் தீயில் நாசமாகின. சேத மதிப்பு சுமார் ரூ.9 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. தீ அக்கம்பக்கத்தில் இருந்த குடியிருப்புகளுக்கு பரவாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்து குறித்து திருச்செந்தூர் கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்