ரெயில்களில் விதிகளை மீறிய23,158 பேர் சிக்கினர்

சேலம் ரெயில்களில் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். இதனால் ரெயில்களில் விதிகளை மீறிய 23 ஆயிரத்து 158 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 54 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-10-03 19:14 GMT

சூரமங்கலம்

அதிகாரிகள் சோதனை

ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வதை தடுக்க சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சின்கா சோதனை நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில் சேலம் ரெயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் பூபதிராஜா தலைமையில் டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கொண்ட குழுவினர் ரெயில் மட்டும் ரெயில் நிலையங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் மாதம் ரெயில்களில் சோதனை நடத்தியதில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்கள், முன்பதிவு இல்லா டிக்கெட் எடுத்து முன் பதிவு பெட்டியில் பயணம் செய்தவர்கள், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக லக்கேஜ் கொண்டு சென்றவர்கள் என 23 ஆயிரத்து 158 பேர் பிடிபட்டனர். அவர்கள் மீது ெரயில்வே சட்டப்படி வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 54 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.

சட்டப்படி நடவடிக்கை

இதுகுறித்து சேலம் ரெயில்வே கோட்ட வணிகத்துறை அதிகாரிகள் கூறுகையில், ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வதை தடுக்கும் வகையில் தொடர்ந்து சோதனை நடத்தி நடத்தி வருகிறோம். கடந்த செப்டம்பர் மாதத்தில் நடத்திய சோதனையில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்கள் 23 ஆயிரத்து 158 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 54 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. எனவே ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ய வேண்டாம். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான லக்கேஜுகள் கொண்டு சென்றால் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். ரெயில்வே விதிமுறைகளை மீறுபவர்கள் மீது ெரயில்வே சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே ரெயில்வே விதிமுறைகளை கடைபிடித்து ரெயில்வே துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்