தனியார் நிதி நிறுவனத்துக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்
தனியார் நிதி நிறுவனத்துக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே உள்ள பள்ளியாடி பகுதியை சேர்ந்தவர் எட்வின்பால். இவர் மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்திடம் கடன் வாங்கினார். இருசக்கர வாகனத்தை பதிவு செய்த அசல் ஆர்.சி.புத்தகத்தை தொலைந்து விட்டதாக நிதி நிறுவனம் நிர்வாகம் தெரிவித்தது. இதனால் வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியும் எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை. இதனைதொடர்ந்து எட்வின்பால் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் தனியார் நிதி நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட எட்வினுக்கு புதிய ஆர்.சி.புத்தகம் மற்றும் நஷ்ட ஈடாக ரூ.20 ஆயிரம், வழக்கு செலவு ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.