திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் விதிமுறைகளை மீறி இயங்கிய வாகனங்களுக்கு ரூ.2 லட்சத்து 37 ஆயிரம் அபராதம்

திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் விதிமுறைகளை மீறி இயங்கிய வாகனங்களுக்கு ரூ.2 லட்சத்து 37 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2022-06-30 05:49 GMT

திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கும் தனியார் நிறுவனங்களில் பணி புரியும் பணியாளர்களை ஏற்றி தொழிற்சாலை பணிக்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள் தகுதி சான்று மற்றும் அதிக பயணிகளை ஏற்றிச்செல்வதாக திருவள்ளூரில் உள்ள வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. புகார்களின் அடிப்படையில் திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் மோகன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பன்னீர்செல்வம், மோகன் ஆகியோர் திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அதிரடியாக தணிக்கை செய்தனர். அப்போது தனியார் நிறுவனத்திற்காக பயணிகளை ஏற்றி செல்லும் 4 வாகனங்களில் அதிக பயணிகளை ஏற்றி சாலை வரி செலுத்தாமல், தகுதி சான்று புதுப்பிக்காத வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் அரசின் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காமல் அதிகமாக சவுடு மண்ஏற்றி சென்ற டிப்பர் லாரிகள் இரண்டையும் பறிமுதல் செய்து ரூ.2 லட்சத்து 37 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வாகனங்கள் அனைத்தும் திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டது. அரசு விதிமுறைகளை மீறி செயல்படும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்