சக்கர நாற்காலியில் பள்ளிக்கு செல்லும் மாற்றுத்திறனாளி மாணவன்

குஜிலியம்பாறை அருகே சக்கர நாற்காலியில் தினமும் 8 மணி நேரம் பயணித்த பள்ளிக்கு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

Update: 2023-04-21 19:00 GMT

குஜிலியம்பாறை அருகே உள்ள நவநாயக்கர்குளத்து பகுதியை சேர்ந்தவர் பெருமாள். கூலித்தொழிலாளி. இவரது சொந்த ஊர் கரூர் மாவட்டம் கடவூர் பெரியபட்டிநாயக்கனூர். இவருடைய 2-வது மகன் நாகராஜ் (வயது 14). சிறுவயதிலேயே அவனது 2 கால்களிலும் குறைபாடு ஏற்பட்டு மாற்றுத்திறனாளியான நாகராஜன் பள்ளிக்கு ெசன்று படிக்க வேண்டும் என்று மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தான். தனது பெற்றோர் கூலிவேலைக்காக வெவ்வேறு ஊர்களுக்கு சென்றாலும் படிப்பை நிறுத்தாமல் நாகராஜ் படித்து வந்தான். தற்போது குஜிலியம்பாறை அருகே தி.கூடலூரில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த பள்ளி 4 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இதனால் பள்ளிக்கு சென்றுவர தினமும் 8 கிலோ மீட்டர் தூரம் சக்கர நாற்காலியை சுழற்றியபடி நாகராஜ் பயணிக்க வேண்டிய அவல நிலை உள்ளது.

இதுகுறித்து நாகராஜிடம் கேட்டபோது, பள்ளிக்கு செல்லும் போது மேடான பகுதியை கடந்து செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. சக்கரத்தை கைகளால் நகர்த்தி செல்வதால் 2 கைகளிலும் வலி அதிகம் ஏற்படுகிறது. தற்போது கோடை வெயில் காலம் என்பதால் பள்ளியில் இருந்து வீட்டுக்கு செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எனவே பேட்டரியுடன் கூடிய சக்கர நாற்காலியை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தான். 

Tags:    

மேலும் செய்திகள்