ஈரோடு பழையபாளையம் தென்றல் நகர் பகுதியில் நேற்று காலை சாலையோரம் மயில் ஒன்று இறந்து கிடந்தது. இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதுபற்றி வெள்ளோடு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்து கிடந்த மயிலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இறந்தது ஆண் மயில் ஆகும். அந்த வழியாக பறந்து வந்தபோது மின் கம்பத்தில் மோதி மின்சாரம் தாக்கி மயில் இறந்ததா?, அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிந்ததும் வனப்பகுதியில் உரிய முறைப்படி மயில் அடக்கம் செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.