நாகை கடைத்தெருவில் புத்தாடை, பொருட்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடை -பொருட்கள் வாங்க நாகை கடைத்தெருவில் பொதுமக்கள் குவிந்தனர்.

Update: 2022-10-21 18:45 GMT

தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடை -பொருட்கள் வாங்க நாகை கடைத்தெருவில் பொதுமக்கள் குவிந்தனர்.

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாகை கடைத்தெருவில் புத்தாடைகள் மற்றும் பலகார பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

ஜவுளி கடைகளிலும், பலசரக்கு கடைகளிலும் பொதுமக்கள் ஆர்வமுடன் பொருட்கள் வாங்கி செல்கின்றனர். இதனால் நாகை கடைவீதி, நீலா வீதிகள் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.

குடை பிடித்து சென்றனர்

நாகையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க முடியாமல் சிரமப்பட்டனர். இருப்பினும் மழையையும் பொருட்படுத்தாமல் சிலர் குடை பிடித்தபடி பொருட்கள் வாங்கி சென்றனர்.

நாகை பப்ளிக் ஆபீஸ் ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் ஆங்காங்கே தற்காலிக ஜவுளி கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். எனவே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

போலீசார் அறிவுறுத்தல்

போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தக்கூடாது. பஸ்கள், ரெயில்களில் வெடிபொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது.திருட்டு சம்பவத்தை தடுக்க பெண்கள் அதிக நகைகளை அணிந்து வரக்கூடாது. சந்தேகப்படும்படியான நபர்கள் தென்பட்டால் அருகிலுள்ள போலீஸ் நிலைய புகார் மையத்தில் தெரிவிக்க வேண்டும் என போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்