நிதி நிறுவன ஊழியரை ஏமாற்றி ரூ.14 லட்சத்துடன் தப்பிய தம்பதி

அடகு நகையை மீட்க வங்கிக்கு அழைத்து சென்று நிதி நிறுவன ஊழியரை ஏமாற்றி ரூ.14 லட்சத்துடன் தம்பதி தப்பினர்.

Update: 2022-08-03 20:32 GMT

சாத்தூர்,

சிவகாசி தாலுகா எம்.புதுப்பட்டியை சேர்ந்தவர் வைரமுத்து (வயது 34). இவர் சிவகாசியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் நண்பர் மூலம் ஓராண்டுகளுக்கு முன்னர் கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் பைசல் (42). இவருடைய மனைவி மாரிசெல்வி (37) ஆகியோர் அறிமுகம் ஆகினர். இவர்கள் இருவரும் வைரமுத்துவிடம் தங்களுக்கு சொந்தமான 468 கிராம் நகை சாத்தூரில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்துள்ளதாகவும், இந்த அடகு நகையை மீட்டு தங்களது பைனான்சில் அடகு வைக்க உள்ளதாகவும் கூறியுள்ளனர். இதனை நம்பி வைரமுத்து ரூ. 14.5 லட்சத்தை கொடுத்து அவர்களுடன் சென்று நகையை மீட்டு வரும் படி தனது டிரைவர் பாலாஜியை அனுப்பி வைத்துள்ளார். இவர்கள் 3 பேரும் சாத்தூரில் உள்ள ஒரு வங்கிக்கு சென்றனர். அப்போது பாலாஜியை காரில் இருக்குமாறு கூறி விட்டு அவர்கள் இருவரும் சென்றனர். சிறிது நேரம் கழித்து வந்த அவர்கள் மற்றொரு வங்கிக்கு சென்று நகையை மீட்டு வருகிறோம் என கூறி விட்டு அங்கிருந்து சென்றனர். நீண்ட நேரம் ஆகியும் வராததால் பாலாஜி அவர்களை தேடினார். ஆனால் அவர்கள் அங்கிருந்து மாயமாகி விட்டனர். இதுகுறித்து வைரமுத்து அளித்த புகாரின் ேபரில் சாத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் அமீர்பாளையத்தில் பதுங்கி இருந்த மாரிசெல்வியை போலீசார் கைது செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்