ஏரிக்கரையில் கிடந்த நாட்டு துப்பாக்கி

ஏரிக்கரையில் கிடந்த நாட்டு துப்பாக்கி

Update: 2023-05-22 18:45 GMT

பூதலூர் அருகே ஏரிக்கரையில் கிடந்த நாட்டுத்துப்பாக்கி கைப்பற்றப்பட்டு 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாட்டுதுப்பாக்கி

தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே புங்கனூர்-வெண்டையம்பட்டி சாலையில் அமைந்துள்ள காமத்தி ஏரியின் வடகரையில் நாட்டு துப்பாக்கி ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்த அந்்த பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் நந்தவனப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ஜெயசீலன் (வயது 42) சம்பவ இடத்திற்கு வந்து கேட்பாரற்று கிடந்த நாட்டு துப்பாக்கியை கைப்பற்றி பூதலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து புகார் செய்தார். அதன்பேரில் பூதலூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளவரசன் நாட்டு துப்பாக்கி குறித்து விசாரணை நடத்தினார்.

2 பேர் கைது

விசாரணையில் இந்த நாட்டு துப்பாக்கி புதுக்குடி நரிக்குறவர் காலனியை சேர்ந்த பாண்டியன் (29), குட்டி என்கிற ஏசுதாஸ் (22) ஆகியோரது என்பது தெரியவந்தது. இதுகுறித்து பூதலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்