மளிகை பொருட்களின் விலையை குறைக்க கமிட்டி அமைக்க வேண்டும் கடலூரில் விக்கிரமராஜா பேட்டி

மளிகை பொருட்களின் விலையை குறைக்க கமிட்டி அமைக்க வேண்டும் என்று கடலூரில் விக்கிரமராஜா கூறினார்.

Update: 2023-07-09 19:11 GMT

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நேற்று கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விலையை குறைக்க நடவடிக்கை

காய்கறி விலை ஏறுவதும், இறங்குவதும் வழக்கமான ஒன்று தான். வரத்து குறைவாக இருக்கும் போது, விலை உயரும். தக்காளி விளைச்சல் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து வரும்.

அங்கு விளைச்சல் பாதிப்பு உள்ளதால், விலை உயர்ந்துள்ளது. இந்த விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மளிகை பொருட்களான துவரம் பருப்பு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதை அரசு குறைத்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. சீரகமும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

கமிட்டி அமைக்க வேண்டும்

மளிகை பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என்றால், வணிகர் சங்க பிரதிநிதிகள், வேளாண்மை துறை அதிகாரிகள், விவசாய சங்க நிர்வாகிகள் என இணைந்து கமிட்டி அமைத்தால் மட்டுமே தேவைக்கு ஏற்ப பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறதா?, பொருட்கள் வீணாகாமல் பாதுகாக்கப்படுகிறதா? என்பதை உரிய முறையில் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க முடியும். இதன் மூலம் தற்காலிக விலையேற்றம் இருக்காது. விலை ஏற்றத்திற்கும் வியாபாரிகளுக்கும் தொடர்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்