முதியவரை மோகத்தில் வீழ்த்தி பணத்தை சுருட்டிய கல்லூரி மாணவி
முதியவரை மோகத்தில் வீழ்த்தி பணத்தை சுருட்டிய கல்லூரி மாணவி
அவள்...
இளம் வயது பதுமை...
ஆனால் அவர்...
இளமையை தாண்டிய முதுமை...
இருப்பினும் அவருக்குள்
அவள் மீது ஒருவித ஈர்ப்பு...
அது வந்தது எப்படி...?
எல்லாம் அவன் செயலால் நடந்தது அல்ல....
எல்லாம் அந்த செயலி மூலம் தான் நடந்தது...
ஆம்..
நவீன காலத்தில்....சமூக வலைத்தளத்தில்...
மொபைல் ஆப் என்கிற செயலிகள்
நல்லவற்றையும் விதைக்கின்றன...
தீயவற்றையும் வளர்க்கின்றன...
அந்த வகையில்....
பாலியல் உணர்வுகளை தூண்டி சீரழிக்க கூடிய வகையில்
இந்த ஆப்புகள்....இளைஞர்களின் எதிர்காலத்துக்கு ஆப்பு வைக்கின்றன...
ஆம்...
ஓரின சேர்க்கையாளர்களின் சேர்க்கைக்கும்...
அதன் மூலம் வாடிக்கையாளர்களை வளைத்துபோடவும்...
ஆண், பெண் நட்பை வளர்ப்பதாக கூறி, தப்பை வளர்க்கும் வகையிலும் இந்த செயலிகள் செயல்படுகின்றன.
அந்த ஆப் என்கிற வலையில்தான்...
இந்த முதியவரும் அகப்பட்டுக்கொண்டார்...
நட்பாக நினைத்துதான் பழகினார். ஆனால் அது அவருக்கே தப்பாக மாறி விட்டது.
அது பற்றி பார்க்கலாம்:-
என்ஜினீயரிங் கல்லூரி மாணவி
கோவை வடவள்ளி ஐ.ஓ.பி. காலனி பகுதியை சேர்ந்தவர் அனந்த கிருஷ்ணன் (வயது 65). முதியவரான இவர், ஆண் மற்றும் பெண்கள் நட்பு வளர்க்கும் பிரபலமான மொபைல் ஆப்பில் (செயலி) இணைந்தார்.
இந்த செயலி மூலமாக கோவையை சேர்ந்த இளம் பெண் ஒருவர் அறிமுகம் ஆனார்...
இவர்களது பழக்கம் நட்பாகவே இருந்ததாம்...
அந்த இளம் பெண், தான் கோவையில் ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் ஆர்க்கிடெக் படித்து வருவதாக கூறி உள்ளார்.
இந்த செயலி பழக்கம்...நாளடைவில் அவர்களை நேரிலும் சந்திக்க வைத்தது.
இந்த சந்திப்பு அடிக்கடி நிகழ்ந்தது.
இனிக்க...இனிக்க பேசினாள்..
இதனால் அவரது தூக்கத்தை தொலைக்க வைத்தாள்.
ரூ.1 லட்சம் பறித்து சென்றனர்
ஆனால் ஒருநாள்...
அந்த கல்லூரி மாணவி, 3 மர்ம நபர்களுடன் சேர்ந்து அவரது வீட்டுக்குள் வந்தாள். அந்த 3 பேர், மாணவியுடன் நீங்கள் பழகுவதை வெளியில் சொல்லாமல் இருக்க வேண்டும் என்றால்....? ரூ.1 லட்சம் தரவேண்டும் என்று கூறி முதியவரிடம் மிரட்டினர். முதியவரும் வேறு வழியில்லாமல் பணத்தை அவர்களிடம் கொடுத்து விட்டார்.
ஆனால்...இது அன்றுடன் முடிந்து விடவில்லை. மீண்டும் சில வாரங்கள் கழித்து, அந்த 3 மர்ம நபர்கள் அவரிடம் வந்தனர்...பணம் கேட்டு மிரட்டினர். ஆனால் முதியவர் அதற்கு, மறுத்து விட்டார்.
கைது
இந்த நிலையில் மாதர் சங்கத்தில் இருந்து பேசுவது போல், சுதா என்கிற ஒரு பெண் முதியவரை போனில் அழைத்து, உங்களுடன் பழகிய கல்லூரி மாணவி உங்கள் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார் என்று கூறி உள்ளார்.இதனால் முதியவர் பேரிடி தாக்கியது போல் அதிர்ச்சியில் உறைந்தார்.
அன்று....செயலி மூலம் பழகினாள்... ஆனால் இன்று செயலில் சிக்க வைக்கும் வில்லியானாள்...! என்று மனதுக்குள் நொந்து கொண்டார். உடனே அவர் உஷாராகி... இது குறித்து அவர் கோவை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவரை மோகத்தில் வீழ்த்தி பணத்தை சுருட்டிய என்ஜினீயரிங் கல்லூரி மாணவியை கைது செய்தனர். கல்லூரி மாணவியுடன் வந்து பணம் பறித்து மிரட்டிய 3 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.