அடிக்கடி செல்போனில் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை

அடிக்கடி செல்போனில் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2023-08-13 08:47 GMT

கல்லூரி மாணவி

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட வி.பி.கே.நகர், காமராஜர் தெருவை சேர்ந்தவர் லலிதா (வயது 19), இவர் வண்டலூர் அடுத்த கொளப்பாக்கத்தில் உள்ள தனியார் கலை கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் லலிதா தொடர்ந்து செல்போனில் அடிக்கடி பேசி கொண்டிருந்ததால், அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த லலிதா நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லலிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்மையிலேயே செல்போனில் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் லலிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்