வாய்க்காலில் குழந்ைத பிணம்
திருவோணம் அருகே வாய்க்காலில் குழந்தை பிணம் கிடந்தது. இதுதொடர்பான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு:
திருவோணம் அருகே வாய்க்காலில் குழந்தை பிணம் கிடந்தது. இதுதொடர்பான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தை பிணம்
திருவோணத்தை அடுத்துள்ள அனந்தகோபாலபுரத்தில் உள்ள நடுவிக்கோட்டை வாய்க்காலில் குறைமாதத்தில் பிறந்த ஆண் குழந்தை பிணம் கிடந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரனுக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அவர் கொடுத்த புகாரின் பேரில் திருவோணம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
இதுதொர்பாக திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாய்க்காலில் பிணமாக கிடந்த குழந்தை யாருடையது?, குறை மாதத்தில் பிறந்ததால் குழந்தையை ஆற்றில் வீசி சென்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.