ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு கட்டு இலை ரூ.1,800-க்கு விற்பனை

தொடர் முகூர்த்தம் எதிரொலி காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு கட்டு இலை ரூ.1,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரேநாளில் 6 மடங்கு விலை உயர்ந்துள்ளது.

Update: 2022-06-12 19:51 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

தொடர் முகூர்த்தம் எதிரொலி காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு கட்டு இலை ரூ.1,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரேநாளில் 6 மடங்கு விலை உயர்ந்துள்ளது.

வாழை சாகுபடி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம், மல்லி, மானகசேரி, வலையப்பட்டி, வத்திராயிருப்பு, புதுப்பட்டி, நாச்சியார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு சாகுபடி செய்யப்படுள்ள வாழை இலைகள் விற்பனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

அதேபோல நாகர்கோவில், தென்காசி ஆகிய பகுதிகளில் இருந்தும் வாழை இலைகள் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

தொடர் முகூர்த்தம்

இந்தநிலையில் தொடர் முகூர்த்தம் காரணமாக வாழை இலைகள் விலை உயர்ந்துள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஒரு பூட்டு இலை ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல ஒரு கட்டு இலை ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது தொடர்ந்து முகூர்த்தம் என்பதாலும், கோவில் திருவிழாக்கள் தொடர்ந்து நடைபெறுவதால் வாழை இலையின் தேவை அதிகரித்து விட்டது.

இதையடுத்து ஒரு பூட்டு இலை ரூ. 60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

6 மடங்கு விைல உயர்வு

30 பூட்டுக்கொண்ட இலை ஒரு கட்டு ஆகும். ஒரு கட்டு இலைகள் (150 எண்ணம்) ரூ.1800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நேற்று திருமணம் வைத்திருந்தவர்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.

ஒரேநாளில் 6 மடங்கு விலை உயர்ந்ததால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு சில ஓட்டல்களில் இலை இல்லாமல் தட்டில் உணவு பரிமாறப்பட்டது குறிப்பிடத்தக்கது. விலை உயர்வால் பொதுமக்கள் உள்பட அனைவரும் சிரமப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்