குடியிருப்பில் உலா வந்த கரடி

கோத்தகிரி அருகே குடியிருப்பில் உலா வந்த கரடியால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

Update: 2023-09-02 20:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரி அருகே கீழ் அனையட்டி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு அருகே திம்பட்டி, கடக்கோடு உள்ளிட்ட கிராமங்களும் உள்ளன. இந்த பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கரடிகள் நடமாடி வருகின்றன. இந்தநிலையில் நேற்று முன்தினம் பகல் நேரத்தில் கீழ் அனையட்டி குடியிருப்பு பகுதியில் கரடி உலா வந்தது. இதை கண்ட பொதுமக்கள் அச்சமடைந்ததுடன், வீட்டிற்குள் தஞ்சம் அடைந்தனர். சிறிது நேரம் அதே பகுதியில் சுற்றித்திரிந்த கரடி, பின்னர் அருகில் இருந்த தேயிலை தோட்டத்திற்குள் சென்று மறைந்தது. ஊருக்குள் உலா வரும் கரடி பொதுமக்களை தாக்கி அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு, கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்