மூதாட்டியிடம் 9 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு

மூதாட்டியிடம் 9 பவுன் தாலிச்சங்கிலியை வாலிபர் பறித்து சென்றார்.

Update: 2022-09-22 21:25 GMT

திருச்சி தென்னூர் அண்ணாநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி உஷாராணி (வயது 61). இவர் சம்பவத்தன்று இரவு தனது பேரக்குழந்தைகளுடன் வீட்டின் அருகே நடைபயிற்சி சென்றார். அப்போது அவருக்கு எதிர்திசையில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் உஷாராணி அணிந்திருந்த 9 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றார். இது குறித்து அவர் தில்லைநகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்