மூதாட்டியிடம் 6 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

நெல்லையில் மூதாட்டியிடம் 6 பவுன் தங்க சங்கிலி பறித்து சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-07-24 19:13 GMT

நெல்லை டவுன் பாரதியார் தெருவை சேர்ந்தவர் அஞ்சூரான். இவரது மனைவி மீனா (வயது 71). அஞ்சூரான் இறந்துவிட்டதால், மீனா தனது மருமகள், பேரனுடன் வாழ்ந்து வருகிறார். மீனா நேற்று காலையில் வழக்கம் போல் பால் வாங்குவதற்காக அந்த தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணிந்த 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

அவர்களிடம் ஒருவன் மீனாவிடம் ஏதோ கேட்பது போல் சென்றார். இப்போது மற்றொருவன் கண் இமைக்கும் நேரத்தில் மீனாவின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து நெல்லை டவுன் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ரசீதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு, அந்த மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்