4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

புவனகிரி அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 64 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-13 18:45 GMT

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி (வயது 64). சம்பவத்தன்று அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த 4 வயது சிறுமி, வீட்டின் அருகில் சக குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். இதை பார்த்த தட்சணாமூர்த்தி, தனது செல்போனில் 'கேம்' வைத்து தருவதாக கூறி, அந்த சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து சென்றார். பின்னர் அவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் சிறுமி அழுது கொண்டே தனது வீட்டுக்கு வந்து நடந்த சம்பவத்தை பற்றி பெற்றோரிடம் கூறியுள்ளாள். இதை கேட்டு பதறிய சிறுமியின் பெற்றோர், சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தட்சணாமூர்த்தியை கைது செய்தனர். 4 வயது சிறுமிக்கு 64 வயது முதியவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்