கோழிகளை விழுங்கிய 12 அடி நீள மலைப்பாம்பு
கோழிகளை விழுங்கிய 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
பேரணாம்பட்டு அருகே உள்ள அனந்தகிரி கிராமத்தை சேர்ந்தவர் முரளி. இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பண்ணை அமைத்து 25-க்கும் மேற்பட்ட நாட்டு கோழிகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று கோழிகளுக்கு தீவனம் போட முரளி சென்ற போது 2 கோழிகளை முழுங்கிய நிலையில் சுமார் 12 அடி நீள மலைப்பாம்பு கிடந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த முரளி பேரணாம்பட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வனவர் தயாளன் மற்றும் வனத்துறையினர் சென்று மலைப் பாம்பை மீட்டு அருகிலுள்ள மோர்தானா காப்புக்காட்டில் விட்டனர்.